விஜய்சேதுபதி- மம்மூட்டி இணையும் புதிய படம்!

விஜய்சேதுபதி- மம்மூட்டி இணையும் புதிய படம்!

புதியப் படம் ஒன்றிற்காக நடிகர்கள் மம்மூட்டி மற்றும் விஜய்சேதுபதி ஒன்றிணைய இருக்கிறார்கள்.

‘காக்கா முட்டை’ படம் மூலமாகத் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் மணிகண்டன். கடைசியாக இவரது இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’ படம் வெளியானது. விமர்சன ரீதியாக இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இயக்குநர் மணிகண்டன் இப்போது தன்னுடைய அடுத்தப் படத்தை இயக்குவதற்குத் தயாராகி வருகிறார்.

இந்தப் படத்தில்தான் நடிகர்கள் மம்மூட்டியும், விஜய்சேதுபதியும் இணைய இருக்கிறார்கள். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் பல முன்னணி நடிகர்களும் இணைய வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது குறித்தான விவரம் விரைவில் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும்.

VenkateswarRao

’ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் மணிகண்டனும் நடிகர் விஜய்சேதுபதியும் இணையும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மலையாளத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான 19(1)(a) திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.   

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in