கெளதம் மேனன்- வடிவேலு கூட்டணியில் புதிய படம்

கெளதம் மேனன்- வடிவேலு கூட்டணியில் புதிய படம்
வடிவேலு - கெளதம் மேனன்

வைகைபுயல் வடிவேலுவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் கெளதம் மேனன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வைகைபுயல் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார். இவர், சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு வடிவேறு அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கெளதம் மேனன் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள கெளதம் மேனன், "இந்த படம் ஒரு காதல், காமெடி படமாக இருக்கும். நான் யோசித்து வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும் என்று வடிவேலு சொல்லி இருக்கிறார். படத்திற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது" என்றார்.

Related Stories

No stories found.