ரஜினி படத்தில் நடிக்க ஓர் அரிய வாய்ப்பு: புதிய முகங்களைத் தேர்வு செய்யும் லைகா நிறுவனம்!

ரஜினி படத்தில் நடிக்க ஓர் அரிய வாய்ப்பு: புதிய முகங்களைத் தேர்வு செய்யும் லைகா நிறுவனம்!

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்திற்கு நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யும் பணியை லைகா நிறுவனம் தொடங்கியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான ‘லால் சலாம்’ படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்த தகவல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில், 'லால் சலாம்' படத்தின் போஸ்டர்களும் வெளியாகின. ஸ்டம்ப், பேட், ஹெல்மட் ஆகியவை நெருப்பில் எறிவது போல போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டைப் பின்னணியாகக் கொண்டிருக்கும் என லைகா நிறுவனம் வெளியிட்ட போஸ்டர்கள் உறுதிப்படுத்துகின்றன. விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். மேலும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதற்கான பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மும்பையில் செய்து வருகிறார்.

இந்நிலையில் 'லால் சலாம்' படத்திற்காக நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது. அனைத்து வயதுடைய நடிகர்கள், நடிகைகள், ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமிகள் இந்த படத்திற்குத் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். அதற்கான விளம்பரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சாலிகிராமத்தில் உள்ள கோல்டன் பாரடைஸ் திருமணக் கூடத்தில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை ஆட்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in