`ஒரு போதும் டாட்டூ மட்டும் வேண்டாம்’- அனுபவ சமந்தா அட்வைஸ்

`ஒரு போதும் டாட்டூ மட்டும்  வேண்டாம்’- அனுபவ சமந்தா 
அட்வைஸ்

முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் 3 டாட்டூக்கள் குத்திய நடிகை சமந்தா, ‘ஒருபோதும் டாட்டூ குத்த வேண்டாம்’ என ரசிகருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரும் காதல் கணவர் நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்துக்குப் பிறகு நடிகை சமந்தா நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் .

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை முடித்துள்ள நடிகை சமந்தா, அடுத்து `சாகுந்தலம்' படத்தையும் முடித்துவிட்டார். இதன் டப்பிங் பணியை சமீபத்தில் முடித்ததாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து `யசோதா' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹாலிவுட் படமான அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் சமந்தா, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில் ஒருவர், டாட்டூ குத்திக் கொள்வது பற்றி கேட்டார். அதற்கு சமந்தா ’ஒரு போதும் டாட்டூ குத்திக் கொள்ள வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

சமந்தா, நாக சைதன்யாவுடன் 3 டாட்டூ் குத்தியுள்ளார். தெலுங்கில் முதன்முதலில் அறிமுகமான ‘ஏ மாயா சேசாவே’ படத்தை நினைவுகூரும் விதமாக, ‘ஒய்எம்சி’ என்று முதுகில் டாட்டூ குத்தியுள்ளார். விலாவில், நாக சைதன்யாவின் புனைப்பெயரான ‘சாய்’ என்று பச்சைக் குத்தப்பட்டுள்ளது. மணிக்கட்டில் வைக்கிங் சின்னத்தை சமந்தா குத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in