மீண்டும் சர்ச்சையில் ரன்வீர் சிங்... பார்ட்டி ஸ்பீக்கருடன் பொது இடத்தில் அதகளம்

ரன்வீர் சிங் - மனைவி தீபிகா படுகோன் உடன்
ரன்வீர் சிங் - மனைவி தீபிகா படுகோன் உடன்

கர்ப்பிணி மனைவியை விட்டும் விலகுவதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, மற்றுமொரு சர்ச்சையில் நெட்டிசன்களால் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.

பாலிவுட்டின் அடுத்த தலைமுறை நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் ரன்வீர் சிங். கவர்ச்சி பிம்பங்களாக நடிகையரை சித்தரிக்கும் பாலிவுட்டிலிருந்து, தனது நிர்வாண புகைப்படங்களால் ரசிகர்களை கதிகலங்கச் செய்தவர். ஆணழகனாய் அதிகளவில் ரசிகைகளை பெற்றிருக்கும் ரன்வீர் சிங், ஆண்களுக்கான இல்லற உறவுக்கான ஊக்கமூட்டிகளை விளம்பரம் செய்ததோடு, அதற்கான தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராகவும் இணைந்திருக்கிறார். அப்படி அமெரிக்க ஆபாச படவுலகின் நடிகருடன் ரன்வீர் சிங் இணைந்து நடித்த விளம்பரங்கள் சர்ச்சைக்கும், ரசிப்புக்கும் ஒரு சேர ஆளாயின.

ரன்வீர் - தீபிகா
ரன்வீர் - தீபிகா

இதற்கிடையே பாலிவுட் நடிகையரில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரும், மனைவியுமான தீபிகா படுகோனுடன் பிரச்சினை என கடந்த 2 தினங்களாக புதிய களேபரத்துக்கு ஆளாகி இருந்தார் ரன்வீர். மணமாகி 5 வருடங்களுக்குப் பின்னர் ரன்வீர் - தீபிகா தம்பதி தற்போதுதான் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்திருக்கிறார்கள். அந்த உற்சாகத்தை கொண்டாட மனைவியுடன் வெளிநாடு பறந்திருந்தபோது, தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து தீபிகா உடனான திருமண புகைப்படங்களை ரன்வீர் நீக்கி இருந்தார். அவர் நிஜமாலுமே நீக்கினாரா அல்லது தனியாக தொகுத்து வைக்கும் முயற்சியா என்பது புலப்படாததால் ரசிகர்கள் குழம்பிப்போனார்கள்.

இதற்கிடையே, மும்பை பொதுநிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ரன்வீர் சிங் மற்றொரு சர்ச்சையில் சிக்கினார். திரைப்படத்தில் கதாநாயகன் அறிமுகமாகும்போது, பின்னணியில் பிரத்யேக பிஜிஎம் அல்லது அறிமுகப் பாடல் ஒலிப்பது போல, பகிரங்க இசையுடன் ரன்வீர் வலம் வந்தார். பிரபல நகைக்கடை ஒன்றின் தொடக்கவிழாவுக்கு வருகை தந்த ரன்வீர் சிங்கின் பின்னணியில், அவருடைய உதவியாளர் வசமிருந்த அளவில் பெரிய பார்ட்டி ஸ்பீக்கர் இரைச்சலாக ஒலித்துக்கொண்டிருந்தது. லாபி ஒன்றில் அரங்கேறிய இந்த சம்பவம், அருகிலிருக்கும் பொதுஜனத்தை முகம் சுளிக்கச் செய்தது.

இந்த வீடியோ துணுக்கு சமூக ஊடகஙளில் வெளியானதில், இணையவெளியும் கொந்தளித்தது. ’குழந்தைப் பேறு தருணத்தில் கட்டிய மனைவியிடமிருந்து விலகும் ரன்வீர் சிங்’ என்ற வதந்தியே இன்னமும் அடங்காத சூழலில், பொதுவிடத்தில் மூன்றாம் நபர்களை எரிச்சலூட்டும் வகையில் உலா வந்த ரன்வீர் சிங்கை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ’இசை கேட்பவது அவசியமெனில் அனைவரைப் போலவும் ஹெட்போன் உபயோகிக்க வேண்டியதுதானே; தன்னை பிரபலம் என்று நினைத்துக்கொள்பவர்களால் பொது இடங்களில் பெரும் பிராப்ளம் எழுகிறது’ என்றெல்லாம் ரன்வீரை அர்ச்சித்து வருகின்றனர். ஆனால் கவன ஈர்ப்பும், சர்ச்சைகளுமே ரன்வீர் சிங் போன்றவர்கள் வருமானத்துக்கான முதலீடு என்பதால், அவர் இதைப் பற்றி அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in