ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் நடிப்பில் இந்தியிலும், தெலுங்கில் தயாராகி நெட்ஃபிலிக்ஸில் வெளியான ‘ராணா நாயுடு’ வெப் சிரீஸ் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட இந்தியத் தொடராக பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஓடிடி தளங்கள் தங்களது வெப் தொடர்கள் மற்றும் படங்களில் எவை பார்வையாளர்களால் அதிகம் பார்க்கப்பட்டன என்ற தரவுகளை வெளிப்படையாக வெளியிடுவது கிடையாது. ஆனால், உலகின் நம்பர் ஒன் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் 18,000 தலைப்புகளின் கீழ் பார்வையாளர்களால் அதிகம் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ், படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வெளியிட்டுள்ளது.
”What We ed: A Netflix Engagement Report" என்ற தலைப்பில், ஜனவரி முதல் ஜூன் 2023 வரை Netflix-ல் 50,000-க்கும் அதிகமான நேரங்களை கடந்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகள் இடம் பிடித்துள்ளன. அதில் டாப் 1000 பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்திய தயாரிப்புகள் பற்றி பார்க்கலாம்.
ராணா நாயுடு:
இந்த பட்டியலில் இந்தியர்கள் அதிகம் பார்த்த வெப் தொடராக ‘ராணா நாயுடு’ 336வது இடத்தைப் பிடித்துள்ளது. வெங்கடேஷ், ராணா உள்ளிட்ட ஸ்டார்கள் நடித்த இந்த தொடரை 46 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.
சோர் நிகல் கே பாகா:
யாமி கௌதம் நடிப்பில் வெளியாகி 2023-ம் ஆண்டு அமர் கௌஷிக் தயாரிப்பில் அஜய் சிங் இயக்கிய ஹிந்தி த்ரில்லர் திரைப்படமான இது நெஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் 401வது இடம் பிடித்த இந்த படத்தை 41 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.
மிஷன் மஜ்னு:
2023 ஜனவரி 20-ல் வெளியான ‘மிஷன் மஜ்னு’ இந்தி திரைப்படம். தேசப்பற்றை மையமாகக் கொண்டு வெளியான ஸ்பை திரில்லர் திரைப்படமான இதில், சித்தார்த் மல்ஹோத்ரா, ராஷ்மிகா மந்தனா, பர்மீத் சேதி, ஷரீப் ஹாஸ்மி, குமுத் மிஸ்ரா, ரஜித் கபூர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த திரைப்படம் 3 கோடியே 12 லட்சம் பார்வையாளர்களுடன் 599வது இடத்தைப் பிடித்துள்ளது.
திருமதி சாட்டர்ஜி vs நார்வே
ராணி முகர்ஜியின் மாறுபட்ட நடிப்பில் 2023-ம் ஆண்டு வெளியானது. இந்திய தாயின் குழந்தை வளர்ப்பிற்கும், நார்வேவின் சட்டத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம் குறித்த படம். நெட்ஃபிளிக்ஸ் தரவரிசைப் பட்டியலில் 2 கோடியே 96 லட்சம் பார்வையாளர்களுடன் 651வது இடத்தைப் பிடித்துள்ளது திருமதி சாட்டர்ஜி vs நார்வே.
கிளாஸ்:
இண்டர்நேஷனல் பள்ளியில் ஏழை மற்றும் பணக்கார மாணவர்களுக்கிடையே நிகழும் மோதம் மற்றும் கொலை குறித்த கிரைம் வெப் சீரிஸ் ஆஷிம் அலுவாலியாவால் ஸ்பானிஷ் வெப் தொடரான எலைட் என்பதை தழுவி எடுக்கப்பட்டது.
இந்தியாவில் சாதிவெறி, குழந்தைப் புறக்கணிப்பு, ஊழல், ஓரினச்சேர்க்கை, மதப் பாகுபாடு மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட நவீன இளைஞர்களைப் பாதிக்கும் சமூகப் பிரச்சனைகள் குறித்து இந்த வெப்சீரிஸ் பேசியது. நெட்ஃபிளிக்ஸில் இந்த வெப் தொடர் 2 கோடியே லட்சம் பார்வையாளர்களுடன் 724வது தரவரிசைப் பட்டியலை பிடித்துள்ளது.
தூ ஜூதி மெயின் மக்கார்:
லவ் ரஞ்சன் இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்த காமெடி மற்றும் காதல் திரைப்படமான இது 27 லட்சம் பார்வையாளர்களுடன் தரவரிசைப் பட்டியலில் 762வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஷெஹ்சாதா:
பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் வெளியான ஷெஹ்சாதா படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 2 கோடியே 48 லட்சம் பார்வையாளர்களுடன் 840வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஸ்கூப்:
பிரபல பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா இயக்கத்தில் நடிகை கரிஷ்மா தன்னா, ஜீஷன் அய்யூப் நடிப்பில் வெளியான படம் ஸ்கூப். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ஸ்கூப் தொடர் சுமார் 17 மில்லியன் பார்வையாளர்களுடன் 1248வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆக்ஷன் ஹீரோ:
ஆயுஷ்மான் குரானா நடிப்பில் 2023-ல் வெளியான ஆக்ஷன் திரைப்படம் ஒரு கோடியே 56 லட்சம் பார்வையாளர்களுடன் தரவரிசைப் பட்டியலில் 1381வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் டாப் 10 பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளது.
கும்ரா:
தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டான தடம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக கும்ரா திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆதித்யா ராய், மிர்ணாள் தாகூர் உள்ளிட்டோர் நடித்த க்ரைம் சஸ்பென்ஸ் திரைப்படமான இது ஒரு கோடியே 4 லட்சம் பார்வையாளர்களுடன் 1437வது இடத்தைப் பிடித்துள்ளது.