‘அவரைப் பற்றி நான் தப்பா நினைச்சுட்டேன்’ - வெளிப்படையாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின்!

‘அவரைப் பற்றி நான் தப்பா நினைச்சுட்டேன்’ - வெளிப்படையாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின்!
ஆரி அர்ஜுனா, உதயநிதி ஸ்டாலின்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த படம், ‘நெஞ்சுக்கு நீதி’. போனி கபூர் வழங்க, ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் பேவியூ புராஜெக்ட்ஸுடன் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் படக்குழு சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தது. படத்தில் பங்குபெற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் அதில் கலந்துகொண்டனர்.

படத்தின் நாயகனாக நடித்த உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நேர்மையான படத்தைக் கொடுத்துள்ள திருப்தி இருக்கிறது. எனக்கு எந்தவிதமான கஷ்டம் இல்லாமல் படம்பிடித்த ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் என்னுடன் நடித்த ரமேஷ் திலக்கிற்கு நன்றி. அவரது மனைவியும் இதில் நடித்திருக்கிறார். அவர் மனைவிதான் அவருடன் நடிக்கிறார் என்பது தெரியாமல் அவரைச் சந்தேகப்பட்டேன். பிறகு அவரிடம் மன்னிப்புக் கேட்டேன். இயக்குநர் அருண்ராஜா படத்தைத் தமிழுக்கு தகுந்தாற்போல் சிறப்பாக மாற்றினார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்தான்” என்று கூறினார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசுகையில், “இந்தப் படத்தை இயக்க என்னைத் தேர்ந்தெடுத்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. எனக்கு இந்தப் படத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார். ’கனா’ படத்தில் நான் புதுமுகங்களைப் பயன்படுத்தியது போல், இந்தப் படத்திலும் இருக்க வேண்டும் எனக் கூறினார். இந்தப் படத்தில் வசனகர்த்தா தமிழ், பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார். இந்தப் படம் சமூகநீதி பேசும் படம். அதற்காகத்தான் நாங்கள் அனைவரும் உழைத்துள்ளோம்.

‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பு இந்தப் படத்திற்குப் பொருத்தமான ஒன்று. அதை வாங்கிகொடுத்த உதய் சாருக்கு நன்றி” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in