சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்' படத்தைத் தொடர்ந்து உலக நாயகனுடன் இணைகிறார் நெல்சன்?

இயக்குநர் நெல்சன்
இயக்குநர் நெல்சன்

ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனின் படத்தை நெல்சன் இயக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட முறையில் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடன் இயக்குநர் நெல்சன் இணைய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தை அவரது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தற்போது 'ஜெயிலர்' படப்பிடிப்பை திட்டமிட்ட தேதிக்குள் முடிப்பதற்கான வேலையில் இயக்குநர் நெல்சன் ஈடுபட்டுள்ளார். இப்படத்தை முடித்த பிறகு கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்றும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in