ரஜினியின் 169-வது படத்தை இயக்குகிறார் நெல்சன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

அண்ணாத்த
அண்ணாத்த

ரஜினிகாந்தின் 169-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. சிவா இயக்கிய இந்தப் படத்தில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், ரஜினிகாந்தின் 168-வது படம்.

நெல்சன் திலீப்குமார், ரஜினிகாந்த்
நெல்சன் திலீப்குமார், ரஜினிகாந்த்

இதையடுத்து ரஜினியின் 169-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்காக, வெற்றிமாறன், வெங்கட்பிரபு, நெல்சன் திலீப்குமார் உட்பட சில இயக்குநர்கள் அவருக்கு கதை சொல்லியதாக தகவல்கள் வெளியாயின. இதனிடையே, ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவதாகச் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதற்காக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் வீடியோவை, ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்தப் படத்தின் தொடக்க விழா ஏப்ரல் மாதம் நடக்க இருப்பதாகவும், மே மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in