`வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா பேச்சுவார்த்தை ஆரம்பம்!

`வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா பேச்சுவார்த்தை ஆரம்பம்!

‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தான பேச்சுவார்த்தைத் தொடங்கி இருக்கிறது.

’பீஸ்ட்’ படத்தை அடுத்து நடிகர் விஜய் தற்போது நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘வாரிசு’. விஜய்யின் 66-வது படமாக உருவாகி வரக்கூடிய இந்தத் திரைப்படத்தைத் தமிழில் ‘தோழா’ படம் இயக்கிய வம்சி இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் என மாறி மாறி நடந்து வரும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதனை அடுத்து தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தான பேச்சுவார்த்தைத் தொடங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் எப்போதுமே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்குள்ளான ஒன்றுதான்.

’மாஸ்டர்’ பட சமயத்தின் போது அவரது வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனையும் அதனையடுத்து நடந்த ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு மற்றும் குட்டி ஸ்டோரி ஆகிய விஷயங்கள் வைரலாயின. இதனால், ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காமல் போனது.

இதனால், ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவினை பிரம்மாண்டமாக நடத்த தற்போது பேச்சு வார்த்தைத் தொடங்கி உள்ளது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கலாம். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் 67-வது படம் குறித்தான அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in