`மாதம் 25 லட்சம் சம்பளம், எனக்கு மனைவியாக இருக்கிறீர்களா?’: பிரபல நடிகையிடம் கேட்ட தொழிலதிபர்!

`மாதம் 25 லட்சம் சம்பளம், எனக்கு மனைவியாக இருக்கிறீர்களா?’: பிரபல நடிகையிடம் கேட்ட தொழிலதிபர்!

``மாதம் ரூ.25 லட்சம் தருகிறேன், எனக்கு மனைவியாக இருக்கிறீர்களா?'' என்று நடிகையிடம் தொழிலதிபர் ஒருவர் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல இந்தி நடிகை நீது சந்திரா, மாதவன் நடித்த ’யாவரும் நலம்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். தொடர்ந்து அமீரின் ஆதி பகவன், ஆர்யாவின் சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உட்பட சில படங்களில் நடித்தார். பின்னர் இந்திப் படங்களில் கவனம் செலுத்திய அவர், இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவர், நடித்த நெவர் பேக் டவுன் : ரிவோல்ட் (Never Back Down:Revolt) என்ற ஹாலிவுட் படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருந்தார் நீது சந்திரா.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் கூறியிருப்பதாவது: வெற்றிகரமான நடிகையின் தோல்விக்கதைதான் என்னுடையது. தேசிய விருது வாங்கிய 13 பேரின் பெரிய படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், இப்போது எனக்கு வாய்ப்பு இல்லை. ஒருமுறை தொழிலதிபர் ஒருவர் மாதம் 25 லட்சம் சம்பளம் தருகிறேன். எனக்கு மனைவியாக இருக்கிறீர்களா? என்று கேட்டார்.

என்னிடம் பணமும் இல்லை. வாய்ப்பும் இல்லை என்பதால் கவலைப்படுகிறேன். அதிகமான படங்களில் நடித்தும் தேவையில்லாதவள் போன்று உணர்கிறேன். ஒரு பிரபலமான காஸ்டிங் இயக்குநர் ஒருவர், ஆடிஷன் நடந்த ஒரு மணி நேரத்திலே, என்னை நிராகரித்தார். இதன் மூலம் என் நம்பிக்கையை உடைக்கப் பார்க்கிறார்கள்.

இவ்வாறு நீது சந்திரா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in