ஆணுறை விளம்பரத்தில் நிதி அகர்வால்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஆணுறை விளம்பரத்தில் நிதி அகர்வால்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஆணுறை ஒன்றை விளம்பரப் படுத்தி நடித்துள்ள நடிகை நிதி அகர்வாலை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

நடிகை நிதி அகர்வால், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் 'ஹரிஹர வீர மல்லு' படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்போதுகூட முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு சினிமாவில் வளர்ந்துள்ள நடிகை நிதி அகர்வால், ஆணுறை ஒன்றை விளம்பரப்படுத்தி வரும் விளம்பரமொன்றில் தோன்றி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வரும் சூழலில் இதைப்பார்த்த ரசிகர்கள், பணத்துக்காக இப்படியா செய்யறது என்று கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.