அம்மாவாக நயன்தாரா நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

அம்மாவாக நயன்தாரா நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

நயன்தாரா அம்மாவாக நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரித்திருக்கும் த்ரில்லர் படத்தை, விக்னேஷ் ஜி.எஸ் இயக்கியுள்ளார். ஒரு தாய், தன் 8 வயது மகனுடன், விபத்தில் சிக்கும் பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்காக, எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, சகப்பயணிகள் குறிவைக்க, மகனை, தாய் எப்படி காப்பாற்றுகிறாள் என்பதைச் சொல்லும் படம் இது.

தாய் பார்வதியாக நயன்தாராவும் மகனாக ரித்விக்கும் நடித்துள்ளனர். இவர்களுடன் லீனா, ஆர்.என்.ஆர் மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் டைட்டில் இன்று வெளியிட்டுள்ளது. படத்துக்கு '02' என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாக இருக்கிறது. ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in