நடிகை நயன்தாரா பின் கழுத்தில் புதிய டாட்டூ: என்ன எழுதியிருக்கிறது?

நடிகை நயன்தாரா பின் கழுத்தில் புதிய டாட்டூ:  என்ன எழுதியிருக்கிறது?

நடிகை நயன்தாரா கழுத்தின் பின்புறம் குத்தியுள்ள டாட்டூ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் ஜூன் 9-ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ் திரையுலகத்தினர் மட்டுமின்றி தென்னிந்திய நடிகர், நடிகைகள் ஏராளமானோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த தம்பதி இருவரும் தேனிலவு கொண்டாட தாய்லாந்து சென்றனர். இதன் பின் தங்களது வேலைகளில் பிஸியானார்கள். தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் பார்சிலோனா சென்றுள்ளனர். அங்குள்ள முக்கிய நிகழ்ச்சிகளை விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் படங்களும் தினமும் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நயன்தாரா புதிதாக தன்னுடைய பின் கழுத்தில் டாட்டூ குத்தியுள்ளார். அதில் என்ன எழுதி இருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் பிரபுதேவாவை காதலித்தபோது தனது கையில் பிரபு என நடிகை நயன்தாரா டாட்டூ குத்தி இருந்தார். அதன் பின்பு அவருடன் பிரேக்கப் ஆன நிலையில் அதை பாசிட்டிவ் போல மாற்றி இருந்தார். இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கக் கூடாது என்பதற்காக முன்பே யோசித்து பின் கழுத்தில் டாட்டூ குத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in