மகன்களுடன் சேர்ந்து வாழ்த்து கூறிய நயன்தாரா!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா
விக்னேஷ் சிவன் - நயன்தாரா

இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு, அவரது மனைவியும் நடிகையுமான நயன்தாரா பிறந்தாள் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். அதை தொடர்ந்து, நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று விக்னேஷ் சிவனை முன்னணி இயக்குநர்களில் ஒருவராக நிலைநிறுத்தியது.

விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்

தொடர்ந்து, தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். நானும் ரவுடிதான் படத்தின் போதே, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்கத் தொடங்கினர். பல வருடங்கள் கழித்து கடந்த 2022ம் ஆண்டு இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

நயன்தாரா
நயன்தாரா

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். விக்னேஷ் சிவனின் மனைவியும், நடிகையுமான நயன்தாராவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா
நயன்தாரா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in