தியேட்டருக்கு திடீர் விசிட் அடித்த விஜய் சேதுபதி, நயன்தாரா: வைரலாகும் புகைப்படங்கள்

தியேட்டருக்கு திடீர் விசிட் அடித்த விஜய் சேதுபதி, நயன்தாரா: வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன்

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ஓடும் சென்னை தேவி தியேட்டருக்கு நயன்தாராவும் விஜய் சேதுபதியும் இன்று சென்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம், ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. பிரபு, நடன இயக்குநர் கலா, சீமா, ரெடின் கிங்ஸ்லி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி, ராம்போ எனும் கேரக்டரில் நடித்துள்ளார். சமந்தா, கதீஜா எனும் கேரக்டரிலும் நயன்தாரா, கண்மணி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் நயன்தாரா
ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் நயன்தாரா

கடந்த 28-ம் தேதி வெளியான இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் ஓடும் சென்னை தேவி தியேட்டருக்கு நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் திடீர் விசிட் அடித்தனர்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

பின்னர் சிறிது நேரம் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். அவர்களைக் கண்டதும் ரசிகர்கள் விசிலடித்தும் கைதட்டியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். இவர்கள் தியேட்டருக்குச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Related Stories

No stories found.