திருப்பதி கோயில் பின்னணியில் நயன், விக்கி: வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!

திருப்பதி கோயில் பின்னணியில் நயன், விக்கி: வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!

திருப்பதி கோயில் பின்னணியில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் சுமார் 8 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமண தேதியை முடிவு செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்குமாரின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். அதன் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பு திருமணத்தை முடிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் மாதம் 9-ம் தேதி திருப்பதியில் நடப்பதாக இன்று செய்திகள் வெளியாயின. காலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன், ஜோடியாக சாமியை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, இருவரும் கோயிலில் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, திருப்பதி கோயிலின் பின்னணியில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கைகளைப் பிடித்தபடி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in