பரிமாறப்பட்ட 20 வகையான உணவுகள்: விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்தில் கமகமத்த சாப்பாடு

பரிமாறப்பட்ட 20 வகையான உணவுகள்: விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்தில் கமகமத்த சாப்பாடு

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. இவர்கள் திருமணம், ஜூன் 9-ம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. திருமணம், திருப்பதியில் நடக்க இருந்தது. பயண தூரம் உள்ளிட்ட சில காரணங்களால் அங்கு நடத்துவது சிரமம் என்று மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி, இவர்கள் திருமணம் இன்று காலை நடந்தது. 20 சிவாச்சாரியர்கள் மந்திரம் முழங்க, காலை 10.25 மணிக்கு நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான், தயாரிப்பாளர் போனி கபூர், இசை அமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சூர்யா, கார்த்தி , அஜித் மனைவி ஷாலினி உட்பட ஏராளமான திரையுலகினர் மணமக்களை வாழ்த்தினர்.

மதியம் திருமண விருந்து பரிமாறப்பட்டது. இதில் 20 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இவர்கள் திருமணத்தை ஒட்டி, ஒரு லட்சம் பேருக்கு நேற்று மதியம் தமிழகம் முழுவதுமுள்ள ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் முக்கிய கோயில்களில் கல்யாண விருந்து வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் திருமணப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in