முடிவானது நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத் தேதி!

முடிவானது நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத் தேதி!

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத் தேதி வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் மூலம், இந்திக்கும் செல்கிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலில் விழுந்தனர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவருக்கும் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படம் சமீபத்தில் வெளியானது. இதை அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதற்கு முன் திருமணத்தை முடித்துவிட இருவரும் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி இவர்கள் திருமணம் ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாகவும் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் நடைபெற இருக்கும் இடத்தையும் ஏற்படுகளையும் பார்வையிட்டதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in