நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதாம் திருப்பதி தேவஸ்தானம்: என்ன காரணம்?

நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதாம் திருப்பதி தேவஸ்தானம்: என்ன காரணம்?

திருப்பதியில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நேற்று காலை நடந்தது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் உள்பட உட்பட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து, மணமக்கள் இருவரும் இன்று காலை குடும்பத்தினருடன் திருப்பதி சென்றனர். அங்கு ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின் கோயிலுக்கு வெளியே வந்து அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள ஏழுமலையான் கோயில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று போட்டோசூட் நடத்தினர். தற்போது இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இது குறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பால்ரெட்டி கூறுகையில், ஏழுமலையான் கோயில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர், கோயில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் பெரிய அளவில் போட்டோஷூட் நடத்த தேவஸ்தானத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் இதற்கு முன் இதுபோல் யாரும் ஏழுமலையான் கோயில் முன் போட்டோஷூட் நடத்தியது கிடையாது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர், இது பற்றி அவர்களிடம் தகுந்த விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதற்கான காரணம் பற்றி அங்கு இருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

திருமணம் முடிந்த மறுநாளே விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி சர்ச்சையில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in