’தாய்லாந்தில் என் தாரத்துடன்...’: வைரலாகும் நயன், விக்னேஷ் சிவன் ரொமான்ஸ் புகைப்படங்கள்

’தாய்லாந்தில் என் தாரத்துடன்...’: வைரலாகும் நயன், விக்னேஷ் சிவன் ரொமான்ஸ் புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தாய்லாந்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில், கடந்த 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். ரஜினிகாந்த், இந்தி நடிகர் ஷாருக் கான், இயக்குநர்கள் மணிரத்னம், தயாரிப்பாளர் போனி கபூர் உட்பட திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதிக்கு ஜோடியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

பின்னர் உடல்நிலை சரியில்லாததால், திருமணத்திற்கு வராத தனது அம்மாவிடம் ஆசிவாங்க கேரளா சென்றனர். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தனர். இருவரும் இப்போது ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்றுள்ளனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இன்று சில ரொமான்ஸ் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ’தாய்லாந்தில் என் தாரத்துடன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. நடிகை காஜல் அகர்வால் உட்பட சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in