இறைச்சி, கடல் உணவு நிறுவன விளம்பர தூதரானார் நயன்தாரா!

இறைச்சி, கடல் உணவு நிறுவன விளம்பர தூதரானார் நயன்தாரா!

இறைச்சி, கடல் உணவு நிறுவனத்தின் அம்பாசிடராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா, இப்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ’ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான அவர், சில நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார்.

இப்போது, இறைச்சி மற்றும் கடல் உணவுகளை விநியோகிக்கும் ஃபிபோலா (Fipola) என்ற நிறுவனத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்துக்காக நயன்தாரா நடிக்கும் டிவி விளம்பர படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

“நயன்தாரா போன்ற திறமையான ஆளுமையை தூதராக நியமிப்பதன் மூலம் இறைச்சி மற்றும் கடல் உணவை விரும்புவர்களை ஈர்ப்பதை எங்கள் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது’’ என்று ஃபிபோலா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுஷில் கனுகோலு தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா கூறும்போது, “வாடிக்கையாளர்களுக்கு பிரஷ்சான இறைச்சி மற்றும் கடல் உணவுகளை வழங்குவதாகக் கூறும் அவர்களின் வாக்குறுதியை நம்புகிறேன். ஃபிபோலாவுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த நிறுவனத்துடன் நீண்ட மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in