நயன்தாராவுக்கு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன்!- வைரலாகும் வீடியோ!

நயன்தாராவுக்கு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன்!- வைரலாகும் வீடியோ!

நடிகை நயன்தாராவுக்கு அவர் காதலரான விக்னேஷ் சிவன் மீன் உணவை ஊட்டி விடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் ஜூன் மாதம் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன், அவர்கள் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, விக்னேஷ் சிவனின் குலதெய்வக் கோயிலான, தஞ்சாவூர் மாவட்டம், மேல வழுத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் அவர்கள் தரிசனம் செய்தனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'நடக்கும் நல்ல விஷயங்களுக்காக கடவுளின் தரிசனத்திற்கு அனுமதி கேட்டு வந்துள்ளோம்' என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நயன்தாராவுடன் கடல் உணவு உணவகத்தில் சாப்பிடும் விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு ஊட்டி விடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ’சிறப்பாக சாப்பிடும் நேரம் இது, நயன்தாராவுக்கு சிறந்த உள்ளூர் உணவை கொடுப்பதில் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in