நடிப்பை விட்டு வெளியேறுகிறாரா நயன்தாரா?: வளைய வரும் சென்டிமென்ட் தகவல்

நடிப்பை விட்டு வெளியேறுகிறாரா நயன்தாரா?:  வளைய வரும் சென்டிமென்ட்   தகவல்

நடிகர் நயன்தாரா நடிப்பை விட்டு வெளியேறி தயாரிப்பு பணியில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் 'ஐயா' திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகை நயன்தாரா அறிமுகமானார். அவர் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் தன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இதனால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.

சமீபத்தில் நயன்தாரா, தனது நீண்டநாள் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதனால், நடிகை நயன்தாரா தற்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை முடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகப் போவதாகவும் படத்தயாரிப்பு பணிகளை மட்டும் கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாராவின் குடும்பத்தினர் எந்த காரணத்தை முன்னிட்டும் படப்பிடிப்பின்போது தாலியைக் கழட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதால், தற்போது அவர் நடித்து வரும் படங்களில் கூட அவர் தாலியை கழட்டாமல் தான் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

எனவே, பல்வேறு கேரக்டரில் நடிக்கும்போது தாலியைக் கழற்றி வைத்துவிட்டு நடிக்கும் நிலை ஏற்படும் என்பதால், நடிப்பில் இருந்து நயன்தாரா விலக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிப்பார் என்றும், இதன் மூலம் பல புதிய இயக்குநர்களுக்கு அவர் வாய்ப்பு வழங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in