நயன்தாராவுக்கு திருமணத்துக்குப் பிறகும் வரிசை கட்டும் வாய்ப்புகள் - அடுத்தடுத்து வெளியாகும் படங்கள்!

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா

திருமணத்துக்குப் பிறகும் நயன்தாரா நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதனால் அவரின் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஹீரோக்களுக்கு சமமான மாஸ் ரசிகர்களிடம் இவருக்கு இருக்கிறது. எத்தனை இடர்கள், எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் இவர் அதையெல்லாம் பொருட்படுத்தாது நடிப்பை மட்டுமே பதிலாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து விடும். நயன்தாராவுக்கும் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் எப்படி அமையும் என்று தெரியவில்லை.

இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக 'கோல்டு' என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து நயன்தாரா ‘கனெக்ட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் வினய், சத்யராஜ் ஆகியோர் நயன்தாராவுடன் நடித்துள்ளனர்.

நயன்தாரா
நயன்தாரா

இதைத்தொடர்ந்த அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டிலும் கால் பதிக்கிறார்.

இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இதைத்தொடர்ந்து அகமது இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா ‘இறைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75 வது படமும் உருவாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து மலையாள படம் ஒன்றிலும் நிவின் பாலி உடன் நடித்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை குஷிபடுத்த உள்ளது. மேலும் வருகின்ற நவம்பர் 18 நயன்தாராவின் வேறு படங்களில் அப்டேட்டும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in