நயன்தாராவுடன் 3-வது படம்: மோகன் ராஜா மகிழ்ச்சி

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் மூன்றாவது படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக, இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’லூசிஃபர்’. இதில் வில்லனாக இந்தி நடிகர் விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன் உட்பட பலர் நடித்திருந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

மோகன் ராஜா, நயன்தாரா
மோகன் ராஜா, நயன்தாரா

மோகன்லால் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். இந்தப் படத்தில், நயன்தாரா தொடர்பான காட்சிகளின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

காட்ஃபாதர் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் முக்கிய காட்சிகளை எடுத்து முடித்துள்ளோம். ‘அவருடன் மூன்றாவது முறையாக பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது‘ என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மோகன்ராஜா இயக்கத்தில் ’தனி ஒருவன்’, ’வேலைக்காரன்’ படங்களில் நயன்தாரா ஏற்கெனவே நடித்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in