`ஜென்டில்மேன்2' படத்தின் கதாநாயகி நயன்தாரா சக்ரவர்த்தி

`ஜென்டில்மேன்2' படத்தின் கதாநாயகி நயன்தாரா சக்ரவர்த்தி
ஜென்டில்மேன்2 படத்தின் கதாநாயகி நயன்தாரா சக்ரவர்த்தி

பிரமாண்ட படைப்பாக உருவாகும் ஜென்டில்மேன்2 படத்தில் நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக அறிமுகமாகிறது.

தமிழ் திரையுலகில் மெகா தயாரிப்பாளரான கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்ட படம் 'ஜென்டில்மேன்2'. ஜென்டில்மேன், காதலன் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் குஞ்சுமோன். தற்போது 'ஜென்டில்மேன்2' என்ற பிரமாண்ட படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக திரை உலகிலும் சமூக வலைதளங்களிலும் இப்படத்தின் கதாநாயகி யார்? என்ற கேள்வி பரவலாக எழுந்தது. தற்போது அந்த கேள்விக்கு முற்றுபுள்ளி வைத்து கதாநாயகி பெயரை அறிவித்துள்ளார் குஞ்சுமோன். நடிகர்கள் ரஜினி காந்த், மம்முட்டி, மோகன்லால் ஆகியோருடன் முப்பதுக்கும் அதிகமான தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற கேரளாவை சேர்ந்த நயன்தாரா சக்ரவர்த்தி தான் அந்த அறிமுக கதாநாயகி.

இன்னொரு கதாநாயகியும் படத்தில் உள்ளதாகவும், அது யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சஸ்பென்ஸ் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் குஞ்சுமோன். அது யார் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். மேலும் படத்தின் இயக்குநர், கதாநாயன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்ற அறிவிப்புகளும் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in