கேரளாவின் பழமையான கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வழிபாடு: முன்னதாக அசைவ உணவகத்திற்கு திடீர் விசிட்!

கேரளாவின் பழமையான கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வழிபாடு: முன்னதாக அசைவ உணவகத்திற்கு திடீர் விசிட்!

புதுமணத் தம்பதியரான நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேரளாவின் புகழ்பெற்ற செட்டிங்குளங்கரா கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் கடந்த 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தி நடிகர் ஷாருக் கான், இயக்குநர்கள் மணிரத்னம், தயாரிப்பாளர் போனி கபூர் உட்பட திரையுலகினர் திரலாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று கேரளா சென்ற அவர்கள், உடல் நலப்பிரச்சினை காரணமாக திருமணத்திற்கு வர இயலாமல் இருந்த நயன்தாராவின் தாயாரிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து, ஆலப்புழாவில் உள்ள செட்டிக்குளங்கரா கோயிலுக்குச் சென்றனர். மிகவும் பழமையான அந்தக் கோயிலில் இருவரும் சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

முன்னதாக, கொச்சியில் உள்ள சிறிய அசைவ உணவகம் ஒன்றுக்கு திடீர் விசிட் அடித்த இவர்கள், சிறப்பு உணவை சாப்பிட்டனர். இந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in