முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமண அழைப்பிதழ் கொடுத்த நயன்தாரா

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமண அழைப்பிதழ் கொடுத்த நயன்தாரா

நடிகை நயன்தாரா தனது திருமண அழைப்பிதழை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்து ஆசி பெற்றார்.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், இவர்களது திருமணம் குறித்து அவ்வப் போது செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அதுபற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. நிச்சயதார்த்த மோதிரத்தைக் காண்பித்தபடி, நயன்தாரா வெளியிட்டிருந்த புகைப்படம் அப்போது வைரலானது.

இவர்கள் திருமணம், ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. திருமணம் நடக்க இருக்கும் மண்டபத்தை இருவரும் பார்த்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே, இவர்களது திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஜூன் 9-ம் தேதி நடக்கிறது. இதற்கான அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இருவரும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நேற்று நேரில் சந்தித்து திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அப்போது நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in