காளிகாம்பாள் கோயிலில் மேயரைச் சந்தித்த நயன்தாரா
சென்னை மேயர் பிரியா ராஜன், நயன்தாரா, விக்னேஷ் சிவன்

காளிகாம்பாள் கோயிலில் மேயரைச் சந்தித்த நயன்தாரா

சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சென்ற நடிகை நயன்தாரா, அங்கு மேயரை தற்செயலாக சந்தித்துப் பேசினார்.

நடிகை நயன்தாரா, இப்போது `காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. பின்னர், ’லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியுடன் நடித்துவந்த அவர் அந்தப் படத்தையும் முடித்துவிட்டார். அடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே நயன்தாராவும் அவர் காதலர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக, பல்வேறு கோயில்களுக்குச் சென்றுவருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதன்படி அவர்கள் இன்று காலை சென்னையில் புகழ்பெற்ற காளிகாம்பாள் கோயிலுக்குத் தரிசனத்துக்காக சென்றார்கள்.

அப்போது அங்கு சென்னை மேயர் பிரியா ராஜனும் வந்திருந்தார். அவர்கள் அங்கு தற்செயலாகச் சந்தித்து பேசினர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.