நயன்தாரா - விக்னேஷ் சிவன் முதல் தேசிங்கு பெரியசாமி - நிரஞ்சனி வரை; தமிழ் திரையுலகின் நட்சத்திர இணையர்கள்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் முதல் தேசிங்கு பெரியசாமி - நிரஞ்சனி வரை; தமிழ் திரையுலகின் நட்சத்திர இணையர்கள்!
விக்னேஷ் சிவன் - நயன்தாரா

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்தான அறிவிப்பை நேற்று இயக்குநர் விக்னேஷ் சிவன் அறிவித்தார். நேற்று மாலை மெகந்தி வைபவத்துடன் தொடங்கி இருக்கிறது திருமண கொண்டாட்டம் நாளை மகாபலிபுரத்தில் நடக்கவிருக்கும் இந்த திருமணத்தின் மீது தான் ரசிகர்களின் மொத்த எதிர்ப்பார்ப்பும் இருக்கிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்ற மகுடத்துக்குச் சொந்தக்காரரான நயன்தாரா, தனது திருமண கொண்டாட்டத்திலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திப்பதில் வியப்பில்லை. இந்த நேரத்தில் இவர்களைப் போலவே தமிழ் சினிமாவில் இயக்குநரை திருமணம் செய்த நடிகைகள் சிலரைப் பற்றியும் பார்க்கலாம்.

சுந்தர்.சி - குஷ்பு
சுந்தர்.சி - குஷ்பு

குஷ்பு- சுந்தர்.சி:

நடிகை குஷ்புவும் இயக்குநர் சுந்தர்.சி-யும் காதல் திருமணம் செய்தவர்கள். முதலில் குஷ்பு மீதான தன் காதலை வெளிப்படுத்தியவர் இயக்குநர் சுந்தர் தான். தான் இயக்குநர் ஆவதற்கு முன்பிருந்தே குஷ்பு மீது அன்பிருந்ததாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார் சுந்தர். பின்பு, தான் இயக்குநராக (1995) அறிமுகமான ‘முறை மாமன்’ படத்தில் குஷ்புவை கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

சுந்தர் தனது காதலைச் சொன்ன தருணம் பற்றி குஷ்பு ஒரு பேட்டியில் பேசும் போது, “படத்தின் கதை சொல்கிறேன் என்று தான் என்னைச் சந்தித்தார். பின்பு அதையே சாக்காக வைத்துக்கொண்டு என்னிடம் தனது காதலைச் சொன்னார். உடனே நான் சம்மதித்து விடவில்லை. இருவரும் ஐந்து வருடங்கள் பழகிய பின்பு, 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம்” என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னார்.

இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இந்த ஜோடி தங்களது 22-வது திருமண நாளை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜ் - பூர்ணிமா
பாக்யராஜ் - பூர்ணிமா

பூர்ணிமா- பாக்யராஜ்:

நடிகை பூர்ணிமாவும் இயக்குநர் பாக்யராஜும் சினிமா உலகில் மற்றுமொரு பிரபல நட்சத்திர ஜோடி. கடந்த 1982-ல் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்ற படத்தை பூர்ணிமாவை வைத்து பாக்யராஜ் இயக்கினார். 1983-ல் எதிர்பாராத விதமாக பாக்யராஜின் முதல் மனைவி பிரவீணா இறந்து விட, சில காலம் கழித்து பூர்ணிமாவிடம் தனது காதலைச் சொல்லி அவரை திருமணம் செய்து கொண்டார் பாக்யராஜ்.

ரோஜா - செல்வமணி
ரோஜா - செல்வமணி

ரோஜா- செல்வமணி:

நடிகை ரோஜாவை தமிழில் இயக்குநர் செல்வமணி தனது ‘செம்பருத்தி’ படம் மூலமாக 1992-ல் அறிமுகப்படுத்தினார். முதலில் செல்வமணி காதல் சொல்லிய போது ரோஜாவுக்கு அதில் விருப்பமே இல்லாமல் இருந்தது. ஆனால், மெல்ல மெல்ல அவரது நல்ல குணங்கள் பிடித்து போக காதலுக்கு சம்மதம் தெரிவித்தார் ரோஜா. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் தான் செல்வமணி ரோஜாவிடம் தனது காதலைச் சொன்னார். ஆனால் ரோஜா, “எப்போது எனக்கு கதாநாயகியாக நடிப்பது போதும் என்று தோன்றுகிறதோ அப்போது தான் திருமணம்” என்று செக் வைத்தார். அதற்கும் சம்மதித்துக் காத்திருந்தார் செல்வமணி. கிட்டத்தட்ட 13 வருடங்கள் காத்திருந்து குடும்பத்தார் சம்மதத்தோடு இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது.

இவர்களைப் போலவே இயக்குநர் ராஜகுமரன் - தேவயாணி, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி - நிரஞ்சனி ஆகியோரும் சினிமா பிரபலங்களாக இருந்து காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in