நயன்-விக்கிக்கு இரட்டை குழந்தைகள்: பாலிவுட்டில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றவர்கள் லிஸ்ட்!

நயன்-விக்கிக்கு இரட்டை குழந்தைகள்: பாலிவுட்டில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றவர்கள் லிஸ்ட்!

வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரான நயன்தாரா-விக்னேஷ் சிவன் நட்சத்திர ஜோடிக்கு, ஒருபுறம் வாழ்த்துகள் குவிந்தாலும், மறுபக்கம் கடும் சர்ச்சையிலும் சிக்கி உள்ளனர். இதற்கு முன்பு வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்டவர்கள் யாரென்று பார்ப்போம்.

இந்தியாவில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்க கடந்த ஜனவரி மாதமே அரசு தடை விதித்த நிலையில், நயன் - விக்கி ஜோடி எப்படி அந்த முறையில் குழந்தை பெற்றெடுத்தது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர். அவர்களின் பட்டியல் இதோ...

அமீர்கான்: பாலிவுட் நட்சத்திர ஜோடியான அமீர்கான் - கிரண் ராவ் தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் கடந்த 2011-ம் ஆண்டு ஆசாத் ராவ் கான் என்கிற மகன் பிறந்தார்.

ஷாருக்கான்: பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான், கடந்த 2013-ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர். இவர் தான் ஷாருக்கானின் இளைய மகன் அப்ராம் கான்.

பிரியங்கா சோப்ரா: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா - பாப் பாடகர் நிக் ஜோனாஸ் தம்பதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மல்டி மேரி என்கிற பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை அவர்கள் வாடகைத் தாய் மூலமாகவே பெற்றெடுத்தனர்.

ஷில்பா ஷெட்டி: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி - தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் குழந்தையை தானே பெற்றுக்கொண்ட ஷில்பா ஷெட்டி, இரண்டாவது குழந்தையை வாடகைத் தாய் முறையில் பெற்றுக்கொண்டார். கடந்த 2020-ம் ஆண்டு இவர்களுக்கு சமிஷா என்கிற மகள் வாடகைத் தாய் மூலம் பிறந்தார்.

பிரீத்தி ஜிந்தா: பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவும் கடந்த 2021-ம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டார்.

சன்னி லியோன்: பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் - டேனியல் வைபர் தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் ஆஷர், நோவா என்கிற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in