`வெப் சீரிஸ், சீரியலைவிட மோசமா இருக்கு ’- பிரபல நடிகர் திடீர் தாக்கு!

நவாஸுத்தீன் சித்திக்
நவாஸுத்தீன் சித்திக்

இந்திய இணைய தொடர்களின் தரம், டி.வி. சீரியலைவிட மோசமாக இருப்பதாக, நடிகர் நவாஸுத்தீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் நவாஸுத்தீன் சித்திக். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் ரஜினிகாந்தின் ’பேட்ட’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான, நெட்பிளிக்ஸின் முதல் இந்திய வெப் தொடரான சேக்ரெட் கேம்ஸில் (Sacred Games) இவர் நடித்திருந்தார். இந்நிலையில், இந்திய வெப் தொடர்களின் தரம் டி.வி.சீரியல்களை விட மோசமாகிவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நவாஸுத்தின் சித்திக் கூறும்போது, ``இப்போது அதிகமான வெப் தொடர்கள் உருவாகின்றன. ஆனால், தரம் என்று எதுவும் இல்லாமல் போய்விட்டது. சில தொடர்கள், சீரியலை, விட மோசமாக இருக்கிறது. ஆனால், இணையத்துக்காக தயாரிக்கப்படும் வெப் திரைப்படங்கள் நன்றாக இருக்கின்றன. ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக, போபால் சென்றிருந்தபோது, அங்கு ஒரே நேரத்தில் 26 வெப் தொடர்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இந்த நாட்களில் எந்த நடிகரும் வேலை இல்லாமல் இல்லை. எல்லோரும் பிசியாக இருக்கிறார்கள். இதுவும் நல்லதுதான்'' என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in