‘முதியோர்களின் எதிரி டைல்ஸ்; எனது தாய் மாமனை இழந்து விட்டேன்’- ட்விட்டரில் எச்சரிக்கும் நட்டி!

‘முதியோர்களின் எதிரி டைல்ஸ்; எனது தாய் மாமனை இழந்து விட்டேன்’- ட்விட்டரில் எச்சரிக்கும் நட்டி!

“டைல்ஸ் முதியோர்களின் எதிரி. சமீபத்தில் எனது தாய் மாமனை இழந்து விட்டேன். நம்முடைய கௌரவம் டைல்ஸில் இல்லை. நம் முதியோர்களைக் காப்பதில் இருப்பது” என ஒளிப்பதிவாளர் நட்டி உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழின் முன்னணி ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி (எ) நட்ராஜ் சதுரங்க வேட்டை மூலம் பிரபலமானவர். தற்போது மோகன்.ஜி இயக்கத்தில் பகாசூரன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கியத் தகவலைப் பதிவு செய்துள்ளார் நட்டி.

அந்த ட்விட்டர் பதிவில், “டைல்ஸ்... இது முதியோர்களின் எதிரி. சமீபத்தில் எனது தாய் மாமனை இழந்துவிட்டேன். காரணம், குளித்துவிட்டு வந்த உடன் கால் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிர் இழந்தார். நம்முடைய கௌரவம் டைல்ஸில் இல்லை. நம் முதியோர்களைக் காப்பதில் இருப்பது” எனத் தெரிவித்துள்ளார். நட்டியின் பதிவைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். டைல்ஸ் என்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது எனப் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in