வீடுகளில் தேசியக்கொடி: கேஜிஎஃப் நடிகர் வெளியிட்ட பரபரப்பு ட்வீட்!

வீடுகளில் தேசியக்கொடி: கேஜிஎஃப் நடிகர் வெளியிட்ட பரபரப்பு ட்வீட்!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேஜிஎஃப் படத்தின் நடிகர் யாஷ் முக்கியமான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி நடிகர் யாஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வேற்றுமையில் ஒற்றுமை எனும் நமது சின்னமாக மூவர்ணக்கொடி உள்ளது, இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நமது தேசத்தின் அடையாளமான இந்திய தேசியக் கொடியை நம் வீடுகளில் 2022 ஆகஸ்ட் 13 முதல் 15 தேதி வரை ஏற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக நாட்டுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை ஏற்றிவைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in