சிறந்த நடிகர் சூர்யா: 5 தேசிய விருதுகளை தட்டிச் சென்றது `சூரரைப் போற்று'!

சிறந்த நடிகர் சூர்யா: 5 தேசிய விருதுகளை தட்டிச் சென்றது `சூரரைப் போற்று'!

சுதா கொங்கரா இயக்கிய `சூரரைப் போற்று' படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.

டெல்லியில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. அதில், திரைப்படங்கள் எடுக்க மிகவும் சாதகமான மாநிலமாக மத்தியப் பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த படத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளர் விருதும் சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு கிடைத்துள்ளது. சூரரைப் போற்று படத்தில் நடித்த சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுரளிக்கும் கிடைத்துள்ளது. சிறந்த திரைக்கதைக்கான விருது என மொத்தமாக ஐந்து விருதுகள் சூரரைப் போற்று படம் குவித்துள்ளது.

சிறந்த தமிழ் திரைப்படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படமும், சிறந்த தெலுங்கு படமாக ‘கலர் போட்டோ’ வும், சிறந்த மலையாள திரைப்படமாக ‘திங்களச்ச நிஷயம்’ மும், சிறந்த இந்தி திரைப்படமாக ‘துளசிதாஸ் ஜூனியர்’ திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

'களக்காத்த சந்தனமேரம்' பாடலுக்காக தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளார் நாட்டுப்புற பாடகி நஞ்சம்மா. மண்டேலா படத்தை இயக்கிய மடோன்னே அஷ்வினுக்கு சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in