ராஷ்மிகா ராசி... கோடிகளில் எகிறும் சம்பளம்!

ராஷ்மிகா ராசி... கோடிகளில் எகிறும் சம்பளம்!

படத்துக்குப் படம் கோடிகளில் சம்பளம் உயர்கிறது. ‘புஷ்பா’ பட சமயங்களில் ரூ.3 முதல் ரூ.3.5 கோடி வரை சம்பளம் வாங்கிய ராஷ்மிகா மந்தனா ‘புஷ்பா-2’ படத்திற்காக ரூ.6 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த தொகையை சந்தோஷமாக கொடுத்திருக்கிறது தயாரிப்பு தரப்பு. அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகாவின் ஆறு நிமிட வீடியோ வெளியாகி, படத்தின் வியாபாரத்தை எகிற செய்திருப்பதில் மொத்த யூனிட்டும் இப்போது ஹேப்பி!

நம்ம ஊரு நயன்தாராவைப் போலவே ராஷ்மிகாவுக்கு நிறைய ஒற்றுமைகள் உண்டு. தன்னுடன் நடித்த நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியுடனான காதல், மோதிரம் மாற்றும் வரை சென்று இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். இப்போது நயனைப் போலவே தன்னுடைய காதலை இதுவரை உறுதிசெய்யாமல் பல வருடங்களாக விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கதைக்கிறது ஆந்திர தேசம்.

இருவரும் ஒரே வீட்டில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்வதும், ஒருவருக்கொருவர் காதல் மழை பொழிவதும் சமூக வலைதளங்களில் ரொம்பவே பிரபலம்.

நயனைப் போலவே தொடக்கமே அடுத்தடுத்து ஐந்து ஹிட் படங்களைத் தந்த ராஷ்மிகாவுக்கு தமிழில் இதுவரை வெற்றிப்படங்கள் அமையவில்லை. அதனாலென்ன... தெலுங்கு சினிமா அவரை வாரி அணைத்து கோடிகளைக் கொட்டித் தருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மொழி பாகுபாடில்லாமல் ‘நேஷ்னல் கிரஷ்’ என்று ராஷ்மிகாவை செல்லப் பெயர் சொல்லி அழைத்து மகிழ்கிறார்கள் ரசிகர்கள்.

இத்தனை வெற்றிகளிலும் புகழ் போதையை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல், “என்னைவிட எத்தனையோ பெண்கள், அழகாக, திறமையாக இருக்காங்கன்னு தெரியும். அதனால், கிடைத்த வாய்ப்புக்கு நேர்மையாக உழைக்கிறேன்” என்கிறார் ராஷ்மிகா.

காதல்... பிரேக்-அப், மீண்டும் காதல், மார்ஃபிங் வீடியோ, உருவகேலி, தமிழில் ராசியில்லாத நடிகை, என நயனைப் போலவே சர்ச்சைகள் சுற்றி அடித்தாலும், கொஞ்சமும் தளராமல் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து வரும் ராஷ்மிகா மந்தனா, 'புஷ்பா 2' படம் மட்டுமல்லாமல், 'வானவில்', 'தி கேர்ள்ஃபிரண்ட்' போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in