பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் இசை வெளியீட்டு விழா: தேதியை அறிவித்தது திங்க் மியூசிக்!

பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் இசை வெளியீட்டு விழா: தேதியை அறிவித்தது திங்க் மியூசிக்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடெக்சன்ஸ் சார்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைப் பின்னணியாக உருவாகியுள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் முதல் பாடலான ரங்கராட்டினம் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

'இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு' பட இசையமைப்பாளர் தென்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்டு 31ம் தேதி 'நட்சத்திரம் நகர்கிறது' படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா நாளை சென்னையில் நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in