நட்சத்திர ஓட்டலில் நடிகையுடன் சிக்கிய நடிகர்: அடிக்கப் பாய்ந்த 3-வது மனைவி!

நட்சத்திர ஓட்டலில் நடிகையுடன் சிக்கிய நடிகர்: அடிக்கப் பாய்ந்த 3-வது மனைவி!

நட்சத்திர ஓட்டலில் நடிகையுடன் இருந்த நடிகரை, அவருடைய மூன்றாவது மனைவி காலணியால் அடிக்கப் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ். நடிகை விஜயநிர்மலாவின் மகனான இவர், தமிழில், ‘நெஞ்சத்தை அள்ளித்தா’, ’சண்டமாருதம்’, ’மாலினி 22 பாளையங்கோட்டை’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் இவருடைய மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவரிடம் விவாகரத்துக் கோரி நரேஷ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நடிகர் நரேஷ் , கன்னட நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. அதை இருவரும் மறுத்திருந்தனர்.

பவித்ரா லோகேஷ், தமிழில் ’கௌரவம்’, ’அயோக்யா’, ‘க.பெ.ரணசிங்கம்’, ’வீட்ல விசேஷம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் , மைசூரு ஹன்சூர் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடிகர் நரேஷுடன் பவித்ரா லோகேஷ் தங்கி இருந்தார். இதை அறிந்த ரம்யா ரகுபதி, அந்த ஓட்டலுக்கு நேற்று வந்து பிரச்சினையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து போலீஸாரும் மீடியாக்காரர்களும் அங்கு கூடினர். நடிகை பவித்ராவும் நரேஷும் ஓட்டல் அறையில் இருந்து வெளியே வந்தபோது, வாசலில் காத்திருந்த ரம்யா, இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். பின் காலில் இருந்த காலணியை கழற்றி அவரை அடிக்கப் பாய்ந்தார். அங்கிருந்த போலீஸார் அவரை தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், நடிகர் நரேஷ், மூன்றாவது மனைவி ரம்யாவை கண்டபடி திட்டிவிட்டு விசிலடித்து நடனமாடினார். பின்னர் பவித்ராவுடன் லிப்ஃடில் ஏறினார். இதை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in