ரஜினிகாந்த்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து !

ரஜினிகாந்த்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து !

இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் இன்று. 3 தலைமுறைகளாகத் தமிழ் திரைத் துறையின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த்தின் 72-வது பிறந்தநாளை, ரஜினியுடன் சேர்ந்து அவரது ரசிகர்களும் கொண்டாடிவருகின்றனர். சமூக வலைதளங்களில் ரஜினிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணமுள்ளன. இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினிகாந்த் ஜி, தொடர்ந்து உங்கள் நடிப்பின் மூலமும், கற்பனைத்திறன் மூலமும் தொடர்ந்து மக்களுக்கு ஊக்கமளியுங்கள்” என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வாழ்த்து அறிக்கையில், “உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கும் நல்ல உடல் நலத்துடன் திகழவும் விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டும், பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in