நானி, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான திரைப்படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நேரடியாக ஓடிடியில் இந்த படம் வெளியானது. விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநராக விரும்பும் ஒரு இளைஞன் கதை எழுத முயலும் போது அந்த கதையின் இறுதியில் அது தன் முன் ஜென்மத்து கதை என்று உணர்ந்து தன் முன் ஜென்ம நினைவுகளை அறிந்து கொள்வது என பீரியாடிக் படமாக கதை நகரும். நானி, சாய் பல்லவி நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கதையும் பாராட்டப்பட்டது.
தற்போது இந்த ஆஸ்கர் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலில் மூன்று பிரிவுகளில் இந்த படம் இணைந்திருக்கிறது. சிறந்த பீரியாடிக் படம், பின்னணி இசை மற்றும் சிறந்த க்ளாஸிக்கல் கல்ச்சுரல் படம் என்பது தான் அந்த மூன்று பிரிவுகள். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 95-வது அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் ஹாலிவுட் டால்பி தியேட்டரில் நடக்க இருக்கிறது. இதற்காக உலகம் முழுவதும் இருந்து படங்கள் அனுப்ப இந்த வருடம் டிசம்பர் மாத இறுதி வரைக்கும் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்படி அனுப்பப்படும் படங்களை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுகள் அடுத்த வருடம் ஜனவரி 12-ல் இருந்து 17-ம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. ஓட்டு முடிந்த பிறகு நாமினேஷன் பட்டியல் ஜனவரி 24-ம் தேதி அறிவிக்க இருக்கிறார்கள்.
'கல்லிபாய்', 'கூழாங்கல்',' ஜல்லிக்கட்டு' என கடந்த சில வருடங்களில் இந்திய படங்கள் ஆஸ்கார் நாமினேஷனில் கவனம் ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.