`நானே வருவேன்' டீசர் நாளை வெளியீடு: படக்குழு அறிவிப்பு!

`நானே வருவேன்' டீசர் நாளை வெளியீடு: படக்குழு அறிவிப்பு!

‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை வெளியிடப்படுவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் அவரின் தம்பியான தனுஷ் நடித்துள்ள திரைப்படம் `நானே வருவேன்'. இவர்கள் இருவரும் சேர்ந்து உருவான காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இருவரும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அண்ணன், தம்பி என இரு வேடங்களில் தனுஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், செல்வராகவன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வராகவனும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக வரும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திரைப்படத்தின் டீசரை நாளை (15.09.2022) மாலை வெளியிட உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in