`அறுவை சிகிச்சை அல்ல; வழக்கமான பரிசோதனை'- பாலகிருஷ்ணாவுக்கு என்ன பிரச்சினை?

`அறுவை சிகிச்சை அல்ல; வழக்கமான பரிசோதனை'- பாலகிருஷ்ணாவுக்கு என்ன பிரச்சினை?
பாலகிருஷ்ணா

பிரபல நடிகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் ஓய்வெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா. இவர் நடித்து சமீபத்தில் வெளியான ’அகாண்டா’ படம் சூப்பர் ஹிட்டானது. போயபதி ஸ்ரீனு இயக்கி இருந்தார். இதை அடுத்து கோபிசந்த் மலினேனி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். மற்றும் வரலட்சுமி சரத்குமார், கன்னட ஹீரோ துனியா விஜய் உட்பட பலர் நடிக்கின்றனர்.

மருத்துவர்களுடன் பாலகிருஷ்ணா
மருத்துவர்களுடன் பாலகிருஷ்ணா

இந்நிலையில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ``அவருக்கு கடந்த சில மாதங்களாக முழங்காலில் பிரச்சினை இருந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அவர் இப்போது ஓய்வெடுத்து வருகிறார்'’ என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அவர் மருத்துவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையே நடிகர் பாலகிருஷ்ணா தரப்பு இதை மறுத்துள்ளது. அவர் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்குச் சென்றார் என்றும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை, அவர் இப்போது ஹைதராபாத், சாரதி ஸ்டூடியோவில் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.