நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு இரண்டாவது முறை கரோனா பாதிப்பு!

நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு இரண்டாவது முறை கரோனா பாதிப்பு!

பிரபல ஹீரோவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதுபற்றி அவருடைய செய்தி தொடர்பாளர் வம்சி காகா தனது ட்விட்டர் பக்கத்தில், ``பாலகிருஷ்ணாவுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக தன்னைச் சந்தித்தவர்கள், கரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கூறியுள்ளார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணாவுக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள், தெலுங்கு திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in