‘நான் தாயாகப்போகிறேன்!’ - நமீதா பரவசம்

‘நான் தாயாகப்போகிறேன்!’ - நமீதா பரவசம்

விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' (2004) திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நமீதா. பிறகு 'ஆணை', 'பில்லா', 'அழகிய தமிழ் மகன்' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாகவும் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்தார். அதன் பிறகு 'மானாட மயிலாட' நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவர், ‘பிக் பாஸ்' முதல் சீசனில் போட்டியாளர் என தொலைக்காட்சி பக்கமும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 2019-ல் தமிழக பாஜகவில் இணைந்தார்.

சினிமா, தொலைக்காட்சி, அரசியல் என பல தளங்களிலும் இயங்கிவந்த நமீதா தனது நண்பரான வீரேந்தரை 2017-ல் திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில், இப்போது தான் கர்ப்பமடைந்திருப்பதைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களோடு பகிர்ந்திருக்கிறார் நமீதா.

அதில், 'தாய்மை! வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்கும்போது என்னுள் என்னை அறியாமலேயே ஏதோ ஒரு மாற்றம் நம்ப முடியாத அளவு இருக்கிறது. ஒரு பிரகாசமான சூரிய ஒளி என் மீது பட்டு புது தொடக்கம் புது வாழ்வுக்கு என்னை அழைக்கிறது. இதுதான் என் வாழ்வில் வேண்டும் என நினைத்து இத்தனை நாட்கள் நான் வேண்டிக்கொண்டது. என் வயிற்றில் குழந்தையின் அசைவு அது என்னை உதைப்பது என எல்லாம் என்னால் உணர முடிகிறது. முன்னெப்போதும் இல்லாதபடிக்கு என்னை நீ மாற்றி இருக்கிறாய். இது போல இனி எப்போதும் இருக்க என்னை மாற்றி இருக்கிறாய்' என மகிழ்சியாகத் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய பிறந்தநாளான இன்று இந்தச் செய்தியை தெரிவித்திருக்கும் நமீதாவை நடிகை குஷ்பு, 'வாழ்த்துகள் டியர்! கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்!! தாய்மை ஒரு அருமையான பயணம். ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாகக் கொண்டாடு!' என வாழ்த்தியிருக்கிறார்.

மேலும் விஜே அஞ்சனா உள்ளிட்ட பல பிரபலங்களும் ரசிகர்களும் நமீதாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in