‘நாய் சேகர்’ படத்தின் கதை இதுதான்!

இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் தகவல்
 ‘நாய் சேகர்’ படத்தின் கதை இதுதான்!

சதீஷ் நாயகனாக நடித்துள்ள ’நாய் சேகர்’படத்தின் கதை என்ன என்பது பற்றி அதன் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்துள்ள படம், 'நாய் சேகர்'. இதில், சதீஷ், பவித்ரா லட்சுமி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், ஜார்ஜ் மரியன், மாறன், இளவரசு, லிவிங்ஸ்டன், மனோபாலா, ஞானசம்பந்தம் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சதீஷ், பவித்ரா லட்சுமி
சதீஷ், பவித்ரா லட்சுமி

வரும் 13 -ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி, இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் கூறும்போது, “ஒரு மனிதன் நாயாகவும், நாய் மனிதனாகவும் மாறினால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதை. தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை முழுநீள நகைச்சுவை திரைப்படமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. நாய் கேரக்டருக்கு மிர்ச்சி சிவா டப்பிங் பேசியிருக்கிறார். ஒரு சுவாரஸ்யமான கேரக்டரில் நானும் நடித்திருக்கிறேன்” என்றார்.

இந்தப் படத்துக்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவகார்த்திகேயன், விவேக், கிஷோர் ராஜ்குமார் பாடல்கள் எழுதியுள்ளனர். பாடல்களுக்கு அஜீஷும் சிறப்புப் பாடல் ஒன்றுக்கு அனிருத்தும் இசையமைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in