
இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வந்த தகவல் பற்றி நாக சைதன்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்தார் நடிகை சமந்தா. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர்.
இது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போது இருவரும் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
சினிமாவில் இருப்பவரை திருமணம் செய்துகொள்ள விரும்ப வில்லை என்றும் இதனால் பெற்றோர் பார்க்கும் பெண்ணை அவர் மணக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதுபற்றி நாக சைதன்யா தரப்பில் விசாரித்தபோது, இதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
நாக சைதன்யா- சமந்தா இருவருக்கும் சட்டப்பூர்வமாக இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை. அது கிடைத்த பின்பே, இரண்டாவது திருமணம் பற்றி நாக சைதன்யா யோசிப்பார் என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.