
‘கஸ்டடி’ படத்தின் டப்பிங் பணியை நாக சைதன்யா தொடங்கியுள்ளார்.
’மாநாடு’ படத்திற்குப் பிறகு வெங்கட்பிரபு நாக சைதன்யாவுடன் ‘கஸ்டடி’ படத்திற்காக இணைந்துள்ளார். தமிழ்-தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் இதில் நடிக்கின்றனர். இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.
இந்த நிலையில், இதன் டப்பிங் பணியை படத்தின் கதாநாயகனாக நாக சைதன்யா தொடங்கியுள்ளார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார் நாக சைதன்யா. மேலும், நாக சைதன்யா சினிமா பயணத்தில் அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்ட படங்களில் ‘கஸ்டடி’ திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.