சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும்தான்: விவாகரத்து பற்றி முதன் முறையாக பேசிய நாக சைதன்யா

சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும்தான்: விவாகரத்து பற்றி முதன் முறையாக பேசிய நாக சைதன்யா

விவாகரத்து பிரச்சினையில் சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான் என்று நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு ஐதராபாத்தில் செட்டிலான சமந்தா, தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில், இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. அதை இருவரும் மறுத்து வந்தனர். ஆனால், கடந்த வருடம் அக்டோபர் மாதம் 2 -ம் தேதி, தாங்கள் பிரிவதாக சமூக வலைதளத்தில் இருவரும் அறிவித்தனர். இது திரையுலகில் பேசுபொருளானது.

இருவரும் பிரிந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஆனால், இருவரும் அது பற்றி ஏதும் சொல்லவில்லை. இந்நிலையில், நாக சைதன்யாவும் அவர் தந்தை நாகார்ஜுனாவும் இணைந்து நடித்துள்ள ‘பங்கர்ராஜு’ (Bangarraju) என்ற தெலுங்கு படம், நாளை ரிலீஸ் ஆகிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாக சைதன்யா, முதன்முறையாக தனது விவாகரத்து குறித்து பேசினார்.

அப்போது அவர், “நாங்கள் பிரிந்ததில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக எடுத்துக்கொண்ட பரஸ்பர முடிவு அது. அவர் (சமந்தா) மகிழ்ச்சியாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். இதுபோன்ற சூழ் நிலையில் விவாகரத்து சரியான முடிவுதான்” என்று தெரிவித்தார்.

நாக சைதன்யாவின் இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in