`பான் இந்தியா தொடர் இல்லை, அதுக்கும் மேல’: நாக சைதன்யா

`பான் இந்தியா தொடர் இல்லை, அதுக்கும் மேல’: நாக சைதன்யா

நாக சைதன்யா நடிக்கும் வெப் தொடர் தமிழ், தெலுங்கில் உருவாகிறது.

அமேசான் பிரைம் நிறுவனம் பல வெப்தொடர்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் நாக சைதன்யா நடிக்கும் தூதா (Dootha) என்ற வெப் தொடரை தமிழ், தெலுங்கில் தயாரித்துள்ளது. இந்த சூப்பர்நேச்சுரல் ஹாரார் தொடரை , ’யாவரும் நலம்’, சூர்யா நடித்த ’24’ படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரம் குமார் இயக்குகிறார்.

இதில், நாக சைதன்யாவுடன் பிரியா பவானி சங்கர், ’பூ’ பார்வதி, பிராச்சி தேசாய், தருண் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதில் நாக சைதன்யா பல கெட்டப்பில் நடித்திருக் கிறார்.

பார்வதி
பார்வதி

இதில் நடிப்பது பற்றி நாக சைதன்யா கூறும்போது, ``எந்த ஒரு படைப்பையும் அதிக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என விரும்புவேன். பிரைம் வீடியோ போன்ற தளத்துடன் இணைந்து இப்போது அதை முயற்சிக்கிறோம். இது பான் இந்தியா தொடர் இல்லை. உலகம் முழுவதுக்குமான கதை. இந்தக் கதையை விக்ரம் கே.குமார் சொன்னபோது உடனடியாக ஒப்புக்கொண்டேன். ஒரு நடிகனாக இது எனக்கு சவாலானது'’ என்கிறார் நாக சைதன்யா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in